< Back
மாநில செய்திகள்
படிப்பதற்கு விருப்பம் இல்லாததால்  8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
சேலம்
மாநில செய்திகள்

படிப்பதற்கு விருப்பம் இல்லாததால் 8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
20 Sept 2022 1:50 AM IST

சேலத்தில் படிப்பதற்கு விருப்பம் இல்லாததால் 8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

சேலம்,

8-ம் வகுப்பு மாணவன்

சேலம் மரவனேரி கோர்ட்டு ரோடு பகுதியை சேர்ந்தவர் சிவகுகுரு. அவருடைய மகன் அரச குரு (வயது 13). இவன் மணக்காடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். அவனுக்கு படிப்பதற்கு விருப்பம் இல்லாததால் கடந்த சில நாட்களாக பள்ளிக்கூடம் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளான்.

இதனால் அவனை பள்ளிக்கு செல்லுமாறு பெற்றோர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது அங்குள்ள விட்டத்தில் மாணவன் அரசகுரு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவனது உடலை பார்த்து கதறி அழுதனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அஸ்தம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் மாணவன் அரசகுருவின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மாணவனின் தற்கொலைக்கு வேறு காரணம் ஏதும் உள்ளதா? என போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்