< Back
மாநில செய்திகள்
ஆவடி பகுதியில் 89 ரவுடிகள் அதிரடியாக கைது
சென்னை
மாநில செய்திகள்

ஆவடி பகுதியில் 89 ரவுடிகள் அதிரடியாக கைது

தினத்தந்தி
|
4 July 2023 12:22 PM IST

ஆவடி பகுதியில் நடந்த தீவிர தேடுதல் வேட்டையில் 89 ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர் .

ஆவடி போலீஸ் கமிஷனரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ரவுடிகளை கைது செய்ய ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை தீவிர ரவுடி வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கொலை, கஞ்சா மற்றும் கொடூர குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 89 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இவர்களில் கொலை வழக்கில் தொடர்புடைய செங்குன்றம் போலீஸ் மாவட்டத்தில் 14 பேரும், ஆவடி போலீஸ் மாவட்டத்தில் 29 பேரும், நீதிமன்ற வழக்குகளில் ஆஜராகாமல் இருந்து வந்த பிடியாணை எதிரிகள் 5 பேர் மற்றும் சரித்திர பதிவேட்டில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 41 பேர் என மொத்தம் 89 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். ரவுடிகள் மீது இதுபோன்ற கடும் நடவடிக்கை தொடரும் என ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்