< Back
மாநில செய்திகள்
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 89 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது; விவசாயிகள் மகிழ்ச்சி
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 89 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது; விவசாயிகள் மகிழ்ச்சி

தினத்தந்தி
|
13 Nov 2022 11:44 AM GMT

வடகிழக்கு பருவமழை காரணமாக ஒருங்கிணைந்த காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 89 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது‌. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்மழை

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று, நேற்று முன்தினம் காஞ்சீபுரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அறிவித்திருந்தார்.

தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வெளியே வரமுடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

முழு கொள்ளளவை எட்டின

தொடர் மழையின் காரணமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஏரிகள், குளங்கள், குட்டைகள் கிடுகிடுவென நிரம்பி வருகிறது‌‌. இதனால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து வருகிறது‌.

காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 909 ஏரிகளில் 89 ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 98 ஏரிகள் 76 சதவீதமும், 256 ஏரிகள் 51 சதவீதமும், 328 ஏரிகள் 26 சதவீதமும் நிரம்பியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்