< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
பிளஸ்-1 பொதுத்தேர்வு புழல் சிறையில் 5 பெண்கள் உள்பட 89 கைதிகள் தேர்ச்சி
|28 Jun 2022 6:43 AM IST
பிளஸ்-1 பொதுத்தேர்வில் புழல் சிறையில் 5 பெண்கள் உள்பட 89 கைதிகள் தேர்ச்சி பெற்றனர்.
புழல் சிறையை தேர்வு மையாக கொண்டு தமிழகத்தில் உள்ள சிறை கைதிகள் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதினர். அதன்படி புழல், கடலூர், வேலூர், திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை ஆகிய மத்திய சிறைகளில் இருந்து 97 பேர் தேர்வு எழுதினார்கள்.
இந்தநிலையில் நேற்று தேர்வு முடிவு வெளியானது. இதில் தேர்வு எழுதிய 97 பேரில் 5 பெண் கைதிகள் உள்பட 89 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் மதுரை சிறையை சேர்ந்த கைதி அமுதச்செல்வி 557 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், அதே மதுரை சிறையை சேர்ந்த அருண் என்ற கைதி 538 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடத்தையும், புழல் தண்டனை சிறையை சேர்ந்த ராஜேஷ் என்ற கைதி 516 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடத்தையும் பெற்றனர். தேர்வில் வெற்றி பெற்ற கைதிகளுக்கு சிறைத்துறை அதிகாரிகள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.