பெரம்பலூர்
ஜமாபந்தியில் 875 மனுக்கள் ஏற்பு
|ஜமாபந்தியில் 875 மனுக்கள் ஏற்கப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் 1431-ம் பசலிக்கான ஜமாபந்தி அனைத்து தாலுகாக்களிலும் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று வரை நடந்தது. அதன்படி பெரம்பலூர் தாலுகாவில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமையிலும், வேப்பந்தட்டை தாலுகாவில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி தலைமையிலும், குன்னம் தாலுகாவில் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) பால்பாண்டி தலைமையிலும், ஆலத்தூர் தாலுகாவில் கலால் உதவி ஆணையாளர் ஷோபா தலைமையிலும் நடைபெற்றது.
கடந்த 3 நாட்களாக நடைபெற்ற ஜமாபந்தியில் பெரம்பலூர் தாலுகாவில் பெறப்பட்ட 728 மனுக்களில், 376 மனுக்கள் ஏற்கப்பட்டன. 335 மனுக்கள் விசாரணையில் உள்ளது. 17 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். வேப்பந்தட்டை தாலுகாவில் பெறப்பட்ட 466 மனுக்களில், 207 மனுக்கள் ஏற்கப்பட்டது. 237 மனுக்கள் விசாரணையில் உள்ளது. 22 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. குன்னம் தாலுகாவில் பெறப்பட்ட 325 மனுக்களில், 107 மனுக்கள் ஏற்கப்பட்டது. 186 மனுக்கள் விசாரணையில் உள்ளது. 32 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆலத்துார் தாலுகாவில் பெறப்பட்ட 289 மனுக்களில், 185 மனுக்கள் ஏற்கப்பட்டு, 104 மனுக்கள் விசாரணையில் உள்ளது. பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள நான்கு தாலுகாக்களிலும் சேர்த்து மொத்தம் பெறப்பட்ட 1,808 மனுக்களில், 875 மனுக்கள் ஏற்கப்பட்டு, 862 மனுக்கள் விசாரணையில் உள்ளது. 71 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.