< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
சூடானில் ஒரே புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட 87 பேர் உடல்கள்
|14 July 2023 5:44 AM IST
87 பேரின் உடல்கள் ஒரே புதைகுழியில் இருந்து கண்டெடுக்கப்பட்டன.
கார்டூம்,
ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்தினருக்கும், பி.எஸ்.எப். எனப்படும் துணை ராணுவ படைக்கும் இடையேயான மோதல் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி தீவிரம் அடைந்தது. இந்த உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
இந்தநிலையில் சூடானின் மேற்கு பகுதியான டார்பூரில் 87 பேரின் உடல்கள் ஒரே புதைகுழியில் இருந்து கண்டெடுக்கப்பட்டன. எனவே இதனை வெகுஜன படுகொலை என ஐ.நா. சபை கூறி உள்ளது. எனவே இது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.