< Back
மாநில செய்திகள்
85.74 சதவீதம் பேர் குரூப்-4 தேர்வு  எழுதினர்
விருதுநகர்
மாநில செய்திகள்

85.74 சதவீதம் பேர் குரூப்-4 தேர்வு எழுதினர்

தினத்தந்தி
|
25 July 2022 12:45 AM IST

விருதுநகர் மாவட்டத்தில் விண்ணப்பித்தவர்களில் 85.74 சதவீதம் பேர் குரூப்-4 தேர்வு எழுதினர். 11,554 பேர் தேர்வு எழுதவரவில்லை.

விருதுநகர் மாவட்டத்தில் விண்ணப்பித்தவர்களில் 85.74 சதவீதம் பேர் குரூப்-4 தேர்வு எழுதினர். 11,554 பேர் தேர்வு எழுதவரவில்லை.

குரூப்-4 தேர்வு

விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வு 237 மையங்களில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்ைவ எழுத 81,044 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் 69,490 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். அதாவது விண்ணப்பித்தவர்களில் 85.74 சதவீதம் பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர்.

விருதுநகர் தாலுகாவில் 35 தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித்த 12,250 பேரில் 10,317 பேர் தேர்வு எழுதினர். தேர்வு சதவீதம் 84.2. அருப்புக்கோட்டை தாலுகாவில் 37 தேர்வு மையத்தில் நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித்த 11,917 பேரில் 10,245 பேர் தேர்வு எழுதினர். காரியாபட்டியில் 10 தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித்த 3,839 பேரில் 3,418 பேர் அதாவது 89.03 சதவீதம் பேரும், ராஜபாளையம் தாலுகாவில் 46 தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித்த 14,633 பேரில் 12,413 பேர் அதாவது 84.83 சதவீதம் பேரும் தேர்வு எழுதி உள்ளனர்.

சாத்தூர்

சாத்தூர் தாலுகாவில் 17 மையங்களில் நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித்த 7,029 பேரில், 6,113 பேர் அதாவது 66.97சதவீதம் பேரும், சிவகாசி தாலுகாவில் 41 தேர்வு மையங்கள் நடைபெற்ற தேர்வில் 14,098 பேர் எழுத வேண்டிய நிலையில் 11,936 பேர் தேர்வு எழுதியுள்ளனர். தேர்வு எழுதியவர்கள் 84.66சதவீதமாகும். ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் 30 தேர்வு மையங்களில் 9,915 பேர் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 8,545 பேர் தேர்வு எழுதி உள்ளனர். தேர்வு எழுதியவர்கள் 86.18 சதவீதமாகும். திருச்சுழியில் 14 மையங்களில் நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித்த 2,090 பேரில் 1,861 பேர் அதாவது 89.04 சதவீதம் பேர் தேர்வு எழுதி உள்ளனர்.

வெம்பக்கோட்டை தாலுகாவில் 4 தேர்வு மையங்களில் 1,741 தேர்வு எழுத வேண்டிய நிலையில் 1,526 பேரும், வத்திராயிருப்பு தாலுகாவில் 3 தேர்வு மையங்களில் 3,532 பேர் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 3,116 பேரும் தேர்வு எழுதியுள்ளனர்.

தேர்வு எழுத 11,554 பேர் அதாவது 14.26 சதவீதம்பேர் வரவில்லை. சாத்தூர் எட்வர்ட் மேல்நிலைப்பள்ளி மற்றும் எஸ்.ஆர். என்.எம். பாலிடெக்னிக் தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வினை கலெக்டர் மேகநாதரெட்டி ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் செய்திகள்