< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
அரசு விதிகளை கடைபிடிக்காத 85 கடைகளுக்கு அபராதம்
|18 Oct 2022 1:15 AM IST
அரசு விதிகளை கடைபிடிக்காத 85 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சேலம் தொழிலாளர் உதவி ஆணையாளர் கிருஷ்ணவேணி தலைமையில் அலுவலர்கள் சேலம், ஆத்தூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் எடை அளவு மற்றும் பொட்டலப்பொருட்கள் விதிகள் கடை பிடிக்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு நடத்தினர். இதில் 85 கடைகள் அரசு விதிமுறை கடைபிடிக்காமல் இருப்பது தெரிந்தது. இதையடுத்து அந்த கடைகளுக்கு மொத்தம் ரூ.55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.