< Back
மாநில செய்திகள்
நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தேர்தலுக்கு 84 பேர் வேட்பு மனு
அரியலூர்
மாநில செய்திகள்

நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தேர்தலுக்கு 84 பேர் வேட்பு மனு

தினத்தந்தி
|
9 Nov 2022 1:03 AM IST

நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தேர்தலுக்கு 84 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

தாமரைக்குளம்:

அரியலூர் மாவட்டத்தில் திருமழபாடி, செம்பியக்குடி, புதுக்கோட்டை, கண்டிராதீர்த்தம், வெங்கனூர், கவட்டாங்குறிச்சி, கல்லூர், ஏலாக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் நந்தியாறு கூழையாறு மூலம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் நந்தியாறு, கூழையாறு வடிநில பகுதிகளுக்கு நீரினை பயன்படுத்துவோரின் 18 சங்கங்களுக்கு தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று நடைபெற்றது. வேட்பு மனுக்களை அரியலூர் தாசில்தார் கண்ணனிடம் இருந்து பெற்று அரியலூர் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணனிடம் தாக்கல் செய்தனர். இதில் சுமார் 84 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு பட்டியல் 11-ந் தேதி வெளியிடப்படும். வேட்பு மனுக்களை அன்றே திரும்ப பெற்றுக்கொள்ளலாம். தேவையிருப்பின் தேர்தல் 30-ந் தேதி நடைபெறும். தேர்தல் நடத்தும் அலுவலராக கோட்டாட்சியர் செயல்படுவார். ஒவ்வொரு சங்கத்திற்கும் ஒரு தலைவர், 4 முதல் 6 உறுப்பினர்கள் வரை தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் ெதரிவித்தனர். நேற்று நடைபெற்ற வேட்புமனு தாக்கலின்போது புள்ளம்பாடி வடிநில கோட்ட உதவி பொறியாளர் செல்வகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.

மேலும் செய்திகள்