அரியலூர்
809 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்
|ஜெயங்கொண்டத்தில் 809 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜெயங்கொண்டம், கல்லாத்தூர் தண்டலை, பூவாணி பட்டு, வெத்தியார் வெட்டு, கங்கைகொண்ட சோழபுரம், உட்கோட்டை அரசு பள்ளிகள் மற்றும் ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 809 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா தலைமை தாங்கினார். விழாவில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கலந்து கொண்டு 809 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். விழாவில் அரியலூர் ஆர்.டி.ஓ. பரிமளம், ஜெயங்கொண்டம் ஒன்றிய கழக செயலாளர்கள் தனசேகர், மணிமாறன், நகர் மன்ற தலைவர் சுமதி, துணை தலைவர் வெ.கொ.கருணாநிதி, ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் லதா, நகர் மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.