< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
சேலம் அருகே வாலிபரை மிரட்டி ரூ.80 ஆயிரம், 4 பவுன் நகைபறிப்பு-2 பேருக்கு வலைவீச்சு
|9 Jan 2023 1:49 AM IST
சேலம் அருகே வாலிபரை மிரட்டி ரூ.80 ஆயிரம், 4 பவுன் பறித்து சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
வழிப்பறி
சேலம் அருகே வீராணம் டி.பெருமாபாளையம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 27). இவர் நேற்று முன்தினம் மேட்டுப்பட்டி தாதனூர் வழியாக அயோத்தியாபட்டணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த 2 பேர் திடீரென அசோக்குமாரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.80 ஆயிரம் மற்றும் 4 பவுன் நகையை பறித்து சென்றனர்.
வழக்குப்பதிவு
இதுகுறித்து அவர் வீராணம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து பணம், நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.