< Back
மாநில செய்திகள்
முதல் கட்ட முகாமில் 80 சதவீத விண்ணப்பங்கள் பதிவு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

முதல் கட்ட முகாமில் 80 சதவீத விண்ணப்பங்கள் பதிவு

தினத்தந்தி
|
10 Aug 2023 12:15 AM IST

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்வதற்கான முதல் கட்ட முகாமில் 80 சதவீத விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்தார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

766 ரேஷன் கடைகளில்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்துக்கான விண்ணப்பம் பதிவு செய்யும் முகாம்கள் கடந்த 24-ந் தேதி தொடங்கப்பட்டு 2 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள 766 ரேஷன்கடைகளில் 4 லட்சத்து 34 ஆயிரத்து 663 குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் முதற்கட்டமாக 580 ரேஷன் கடைகளுக்குட்பட்ட 2 லட்சத்து 75 ஆயிரத்து 356 குடும்ப அட்டைதாரர்களுக்கு முதற்கட்டமாக நடைபெற்ற முகாம்களில் 80 சதவீதம் பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

2-வது கட்ட முகாம்

இதையடுத்து 2-வது கட்டமாக கள்ளக்குறிச்சி தாலுகாவில் 41 ரேஷன்கடைகளுக்குட்பட்ட 36 ஆயிரத்து 166 குடும்ப அட்டைகள், சின்னசேலம் தாலுகாவில் 39 ரேஷன்கடைகளுக்குட்பட்ட 31 ஆயிரத்து 478 குடும்ப அட்டைகள், சங்கராபுரம் தாலுகாவில் 52 ரேஷன்கடைகளுக்குட்பட்ட 46 ஆயிரத்து 690 குடும்ப அட்டைகள், கல்வராயன்மலை தாலுகாவில் 11 ரேஷன்கடைகளுக்குட்பட்ட 6 ஆயிரத்து 901 குடும்ப அட்டைகள், உளுந்தூர்பேட்டை தாலுகாவில் 18 ரேஷன்கடைகளுக்குட்பட்ட 16 ஆயிரத்து 787 குடும்ப அட்டைகள், திருக்கோவிலூர் தாலுகாவில் 25 ரேஷன்கடைகளுக்குட்பட்ட 21 ஆயிரத்து 285 குடும்ப அட்டைகள் என மொத்தம் 186 ரேஷன் கடைகளுக்குட்பட்ட 1 லட்சத்து 59 ஆயிரத்து 307 குடும்ப அட்டைதாரர்கள் பதிவு செய்வதற்கான முகாம் கடந்த 5-ந் தேதி முதல் வருகிற 16-ந் தேதி வரை நடைபெற்று வருகிறது.

புகார்களை தெரிவிக்கலாம்

இந்த திட்டம் தொடர்பான விவரங்கள், புகார்கள் இருந்தால் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 04151-228801 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இது தவிர அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி கள்ளக்குறிச்சி-04151 -222449, கல்வராயன்மலை-04151-242243, சின்னசேலம்- 04151 -257400, சங்கராபுரம்-04151-235329, உளுந்தூர்பேட்டை 04149-222255, திருக்கோவிலூர்-04151-252316 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்