< Back
மாநில செய்திகள்
குலசேகரம் அருகே 80 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

குலசேகரம் அருகே 80 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்

தினத்தந்தி
|
2 Oct 2023 11:24 PM IST

குலசேகரம் அருகே 80 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது.

குலசேகரம்:

குலசேகரம் அருகே உள்ள முகளியடிமலை அடிவார பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக குலசேகரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு மண்ணுக்குள் பிளாஸ்டிக் பேரலில் 80 லிட்டர் சாராய ஊறலை புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் இந்த சாராய ஊறலை தயார் செய்து ஊற வைத்த திருநந்திக்கரை வியாலிவிளை பகுதியை சேர்ந்த தொழிலாளி தம்பிராஜ் (வயது 45) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

--

மேலும் செய்திகள்