< Back
மாநில செய்திகள்
80 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; வாலிபர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

80 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; வாலிபர் கைது

தினத்தந்தி
|
13 Oct 2023 12:57 AM IST

விக்கிரமசிங்கபுரத்தில் 80 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, வாலிபரை கைது செய்தனர்.

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் பகுதியில் விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார் தலைமையிலான தனிப்படையினர் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது விக்கிரமசிங்கபுரம் சங்கரபாண்டியபுரம் பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சய் (வயது 23) என்பவர் 80 கிலோ புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்