< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
80 சென்ட் கோவில் நிலம் மீட்பு
|23 April 2023 12:15 AM IST
மிடாலம் அருகே 80 சென்ட் கோவில் நிலம் மீட்பு
ஆரல்வாய்மொழி,
இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்கள் எங்கெங்கு ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. யார் கைவசம் உள்ளது என்பதை கண்டறிந்து அதிகாரிகள் மீட்டு வருகிறார்கள். அந்த வகையில் குமரி மாவட்டத்தில் ஏராளமான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள குமரி மாவட்டம் மிடாலம் பகுதியில் உள்ள தெய்வவிநாயகர்கோவிலுக்கு சொந்தமான நிலம் உதயமார்த்தாண்டம் பகுதியில் கண்டறியப்பட்டு அது தாசில்தார் சஜித், செயல் அலுவலர் பொன்னி, கோவில் கணக்கர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலையில் நில அளவையர் அஜித் மூலம் அளவீடு செய்யப்பட்டு 2 இடங்களில் 80 சென்ட் நிலம் மீட்கப்பட்டு கோவில் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டது. பின்னர் அதில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.