< Back
மாநில செய்திகள்
வக்கீல்கள் சங்கத்தில் இருந்து 8 பேர் இடைநீக்கம்; பொதுக்குழுவில் தீர்மானம்
திருச்சி
மாநில செய்திகள்

வக்கீல்கள் சங்கத்தில் இருந்து 8 பேர் இடைநீக்கம்; பொதுக்குழுவில் தீர்மானம்

தினத்தந்தி
|
10 Oct 2023 2:58 AM IST

வக்கீல்கள் சங்கத்தில் இருந்து 8 பேர் இடைநீக்கம் செய்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருச்சி வக்கீல்கள் சங்கம் சார்பில் நேற்று அவசர பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். செயலாளர் கண்ணன், துணைத்தலைவர் சிவக்குமார், பொருளாளர் சசிகுமார், இணைச்செயலாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில், ஜே.ஏ.ஏ.சி. தீர்மானத்தின்படி நாளை (புதன்கிழமை) மாவட்ட நீதிமன்ற நுழைவு வாயில் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், சங்க நலனுக்கு எதிராக செயல்பட்ட 8 வக்கீல்கள் சங்கத்தில் இருந்து இடை நீக்கம் செய்யப்படுகிறார்கள் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்