< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
ஓட்டல் உரிமையாளர் வீட்டில் 8¾ பவுன் நகை கொள்ளை
|3 Aug 2022 10:47 PM IST
குறிஞ்சிப்பாடி அருகே ஓட்டல் உரிமையாளர் வீட்டில் 8¾ பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தொடா்பாக போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
குறிஞ்சிப்பாடி,
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள மீனாட்சிப்பேட்டை நெசவாளர் குடியிருப்பை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 42). இவர் குள்ளஞ்சாவடி பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். வழக்கம்போல் வியாபாரத்துக்கு வந்த சீனிவாசன், அவருடைய மனைவி முல்லைமலரும் பலத்த மழை காரணமாக இரவு வீட்டுக்கு செல்லாமல் ஓட்டலிலேயே தங்கி விட்டனர். மறுநாள் காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்புற்ற 8¾ பவுன் நகைகள், வெள்ளி கொலுசு ஆகியவற்றை காணவில்லை. அதனை மர்மநபர் யாரோ திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் குறிஞ்சிப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னகுமார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.