பெரம்பலூர்
வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 8 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு
|வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 8 பவுன் தாலிச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
குன்னம்
குன்னம் அருகே உள்ள சாத்தநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மனைவி மாதரசி. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பக்க கதவை பூட்டாமல், வீட்டிற்குள் தூங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நள்ளிரவில் வீடு புகுந்த மர்ம நபர்கள் 5 பேர், மாதரசி கழுத்தில் கிடந்த 8 பவுன் தாலிச் சங்கிலியை பறித்தனர். இதனால் திடுக்கிட்டு கண் விழித்த மாதரசி, மர்ம நபர்களை கண்டு கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் வருவதற்குள், மர்ம நபர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இச்சம்பவம் குறித்து குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.