< Back
மாநில செய்திகள்
ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் வீட்டில் 8 பவுன் நகை கொள்ளை
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் வீட்டில் 8 பவுன் நகை கொள்ளை

தினத்தந்தி
|
2 Jun 2023 12:15 AM IST

திருக்கோவிலூர் அருகே ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் வீட்டில் 8 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே திருவரங்கம் கிராமத்தை சேர்ந்தவர் கிருபாநிதி (வயது 75). ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக சென்றார். பின்னர் அங்குள்ள தனது மகள் வீட்டில் தங்கிவிட்டு மறுநாள் வீட்டுக்கு திரும்பி சென்றார். அப்போது அங்கு வீட்டு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதையடுத்து அவர் வீட்டுக்குள் சென்றுபார்த்தபோது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 8 பவுன் நகையை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்