விழுப்புரம்
வக்கீல் வீட்டில் 8 பவுன் நகை திருட்டு
|திண்டிவனத்தில் வக்கீல் வீட்டில் 8 பவுன் நகை திருடு போனது.
திண்டிவனம்
திண்டிவனம் தாடிக்காரர் குட்டை தெருவை சேர்ந்தவர் வக்கீல் ராஜசேகரன். இவர் தனது குடும்பத்துடன் மேல்மலையனூர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். இதைநோட்டமிட்ட மர்மநபர்கள், ராஜசேகரின் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 8 பவுன் நகை, வெள்ளிப்பொருட்களை திருடிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் ரோசனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம் பகுதியில் அடிக்கடி திருட்டு, கொள்ளை சம்பவம் அரங்கேறுவதால் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா திண்டிவனத்திற்கு வந்தார். பின்னர் அவர் திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் கூடுதல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா, இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், திருட்டு மற்றும் கொள்ளை சம்பவத்தை தடுக்க தீவிர ரோந்துப்பணி மேற்கொள்ளவும், கொள்ளையர்களை உடனடியாக கைது செய்யவும் உத்தரவிட்டார்.