< Back
மாநில செய்திகள்
பெண்ணிடம் 8½ பவுன் நகை பறிப்பு
விழுப்புரம்
மாநில செய்திகள்

பெண்ணிடம் 8½ பவுன் நகை பறிப்பு

தினத்தந்தி
|
10 Jun 2022 9:02 PM IST

திண்டிவனம் அருகே பெண்ணிடம் 8½ பவுன் நகை பறிக்கப்பட்டது.

திண்டிவனம்:

திண்டிவனம் அருகே உள்ள ரோஷனையை சேர்ந்தவர் லட்சுமணன் மனைவி தனசேகரி (வயது 58). இவர் நேற்று இரவு வீட்டின் வெளியில் உள்ள கிரில் கேட்டை பூட்டிவிட்டு வராண்டாவில் படுத்து தூங்கியுள்ளார். பின்னர் காலையில் எழுந்து பார்த்த போது கிரில் கேட் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் வீட்டில் இருந்த ¼ பவுன் நகை, ¼ கிலோ வெள்ளி பொருட்களை காணவில்லை. அதிகாலை நேரத்தில் கிரில் கேட் பூட்டை உடைத்து வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர், வீட்டில் இருந்த நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.

இதேபோல் ரோசனை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கோதண்டபாணி மனைவி ராஜேஸ்வரி(75) நேற்று காலை குளித்துவிட்டு, வீட்டின் அருகில் இருந்த மோட்டாரை அணைக்க சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்மநபர், ராஜேஸ்வரியின் கழுத்தில் கிடந்த 8½ பவுன் தாலி சங்கிலியை பறித்தான்.

இதில் பதறிய அவர், கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்ட அவரது மகன்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அதற்குள் மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். மர்மநபர் நகையை பிடித்து இழுத்ததில் ராஜேஸ்வரியின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் ரோசனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்