< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
வீட்டின் முன்பு நின்ற பெண்ணை கீழே தள்ளி 8¾ பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு
|21 Feb 2023 12:47 AM IST
வீட்டின் முன்பு நின்ற பெண்ணை கீழே தள்ளி 8¾ பவுன் தாலிச்சங்கிலி பறிக்கப்பட்டது.
பெரம்பலூர் நகராட்சி 19-வது வார்டுக்கு உட்பட்ட சங்குப்பேட்டை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி செல்வமணி (வயது 55). இவர் நேற்று இரவு 8.30 மணியளவில் தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபா்கள் செல்வமணியை இழுத்து கீழே தள்ளினர். பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 8¾ பவுன் தாலிச்சங்கிலியை பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதில் செல்வமணிக்கு கழுத்தில் லேசான ரத்த காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக செல்வமணியின் குடும்பத்தினர் பெரம்பலூர் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெண்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.