< Back
மாநில செய்திகள்
தமிழகத்தின் 8 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவு
மாநில செய்திகள்

தமிழகத்தின் 8 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவு

தினத்தந்தி
|
9 July 2023 7:21 PM IST

தமிழகத்தின் 8 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது.

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்துவரும் அதே வேளையில், ஒருசில பகுதிகளில் வெப்பமும் சுட்டெரித்தது. இன்று தமிழகத்தின் 8 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது.

மதுரை விமான நிலையம்-104 டிகிரி பாரன்ஹீட்டும், திருச்சி மற்றும் கரூர் பரமத்தி- 102 டிகிரி பாரன்ஹீட்டும், மீனம்பாக்கம்- 101, வேலூர், நாகை, தஞ்சை, கடலூரில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளது.

மேலும் செய்திகள்