கரூர்
மது விற்ற 8 பேர் கைது
|மது விற்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
குளித்தலை அருகே உள்ள ராஜேந்திரம், நடுப்பட்டி வாய்க்கால் பாலம், செட்டிபாறைப்பட்டி ஆகிய பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அந்த பகுதிகளுக்குச் சென்ற போலீசார் சட்டவிரோதமாக மது விற்ற கோவிந்தராஜன் (வயது 63), கண்ணன் (58), பாப்பாத்தி (50) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதேபோல் ஆலத்தூர் பகுதியில் சேப்ளாபட்டி பகுதியை சேர்ந்த முருகன் (40) மற்றும் கல்லடைப்பகுதியை சேர்ந்த கணபதி (45) என்பவர் அவரது வீட்டின் பின்புறத்திலும் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 2 பேரையும் தோகைமலை போலீசார் கைது செய்தனர்.
புன்னம் சத்திரம் பகுதியில் ஆலங்குடியை சேர்ந்த அஜித் (26), அய்யம்பாளையம் பகுதியில் கூடலூர் பகுதியை சேர்ந்த அங்குசாமி (36), தவிட்டுப்பாளையம் அருகே கட்டிப்பாளையம் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த ரத்தினவேல் (62) ஆகிேயார் மது விற்று ெகாண்டிருந்தனா். இதையடுத்து 3 பேரையும் வேலாயுதம்பாளையம் போலீசார் கைது செய்தனர்.