< Back
மாநில செய்திகள்
சென்னையில் கனமழை காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழப்பு - சென்னை காவல்துறை தகவல்
மாநில செய்திகள்

சென்னையில் கனமழை காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழப்பு - சென்னை காவல்துறை தகவல்

தினத்தந்தி
|
5 Dec 2023 8:17 AM IST

சென்னையில் கடந்த 45 மணி நேரத்தில் 47 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.

சென்னை,

`மிக்ஜம்' புயல் காரணமாக சென்னையில் அதி கனமழை பெய்ததால் நகரமே தண்ணீரில் தத்தளிக்கிறது. நகர தெருக்களில் எல்லாம் சூழ்ந்துள்ள மழைநீர் கடந்த 2015-ம் ஆண்டு வெள்ளத்தை நினைவுபடுத்தும் வகையில் இருந்தது. நேற்று முழுவதும் பெய்த மழை, தற்போது ஓய்ந்துள்ளது. இதனால் மாநகரில் ஒருசில இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. கனமழையால் சென்னையில் தற்போது 7 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. மாநகரில் 58 சாலைகளில் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த 45 மணி நேரத்தில் 47 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காட்டுப்பாக்கம் - 29 செ.மீ., நுங்கம்பாக்கம் - 24 செ.மீ., மீனம்பாக்கம் - 19 செ.மீ. மழை பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்