இலங்கையை சேர்ந்த 8 பேர் தமிழகம் வருகை
|இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை சேர்ந்த 8 பேர் தமிழகம் வந்தனர்
ராமேசுவரம்,
இன்று அதிகாலை ராமேசுவரத்தை அடுத்த தனுஷ்கோடி கடலோரப் பகுதியான அரிச்சல் முனை கடற்கரை பகுதியில் இலங்கை அகதிகள் வந்திருப்பதாக அப்பகுதி மீனவர்கள் ராமேசுவர கடலோர காவல் படை குழு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர்கள் அரிச்சல் முனை பகுதியில் இருந்த 8 பேரை மீட்டனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இலங்கை யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த மரியா (வயது 35), மகன்கள் அபிலாஷ் (16) அபினாஷ் (14),ஜாக்சன் (8), அதுபோலே யாழ்பாணம் பகுதி அனைகோட்டை குலவாடி பகுதியை சேர்ந்த விஜய் குமார் (50), இவரது மனைவி தர்சிகா (34), மகன்கள் அஸ்நாத் (15), யோவகாஷ் (11) என தெரியவந்தது. இவர்கள் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகம் வந்ததாக தெரிவித்தனர்.
பின்னர் அந்த 8 பேரும் தனுஷ்கோடி அகதிகல் முகாமில் தங்கவைக்கப்பட்டனர். தொடர்ந்து போலீசார் இவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் ஏற்கனவே இலங்கையை சேர்ந்த 227 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்தது குறிப்பிடதக்கது.