< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
8 மயில்கள் விஷம் வைத்து சாகடிப்பு
|2 March 2023 1:00 AM IST
மேட்டூர்:-
சேலம் மாவட்டம் மேட்டூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஓலைப்பட்டி கிராமத்தில் ஒரு விவசாய நிலத்தில் 8 மயில்கள் இறந்து கிடப்பதாக மேட்டூர் வனச்சரக அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மேட்டூர் வனச்சரகர் சிவானந்தம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் ஓலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி சோலி (வயது 72), தனது நிலத்தில் பயிர் செய்த நெற்பயிர்களை பறவைகள் மற்றும் எலி, பெருச்சாளி போன்றவை சேதப்படுத்தாமல் இருப்பதற்காக விஷம் வைத்துள்ளார். இந்த விஷத்தை சாப்பிட்ட மயில்கள் இறந்து போனது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விவசாயி சோலியை வனத்துறையினர் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.