< Back
மாநில செய்திகள்
வேலூர் மத்திய சிறையில் இருந்து 8 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை
மாநில செய்திகள்

வேலூர் மத்திய சிறையில் இருந்து 8 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை

தினத்தந்தி
|
9 Dec 2023 4:08 PM IST

வேலூர் மத்திய சிறையில் இருந்து இதுவரை 33 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர்,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் நீண்ட காலமாக தண்டனை அனுபவிக்கும் கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன்படி வேலூர் மத்திய சிறையில் இருந்து இதுவரை 33 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஒரு பெண் உட்பட 8 ஆயுள் தண்டனை கைதிகள் வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். அவர்களின் முன்விடுதலைக்கான ஆணை மற்றும் சிறையில் செய்த வேலைக்கான ரூ.5.69 லட்சம் ஊதியம் ஆகியவற்றை வேலூர் சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் வழங்கினார்.

மேலும் செய்திகள்