< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
ெரயிலில் அடிபட்டு 8 ஆடுகள் பலி
|19 Oct 2023 4:09 AM IST
ெரயிலில் அடிபட்டு 8 ஆடுகள் பலியானது.
அருப்புக்கோட்டை ெரயில் நிலையம் அருகே உள்ள காலியிடங்களில் ஆடு, மாடுகள் மேய்வது வழக்கம். இந்தநிலையில் அருப்புக்கோட்டை சத்தியவாணி முத்து நகர் பகுதியை சேர்ந்த பொன்னுச்சாமி, ரத்தினவேல், பூமி உள்ளிட்ட சிலருக்கு சொந்தமான ஆடுகள் ெரயில்வே தண்டவாளம் அருகே நேற்று மேய்ந்து கொண்டிருந்தன. அதில் சில ஆடுகள் ெரயில் தண்டவாளம் மேலே நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரெயிலில் அடிபட்டு 8 ஆடுகள் பரிதாபமாக இறந்தன.