< Back
மாநில செய்திகள்
மேய்ச்சலுக்கு சென்ற 8 ஆடுகள் சாவு
திருவாரூர்
மாநில செய்திகள்

மேய்ச்சலுக்கு சென்ற 8 ஆடுகள் சாவு

தினத்தந்தி
|
25 Oct 2023 12:45 AM IST

வலங்கைமான் அருகே மேய்ச்சலுக்கு சென்ற 8 ஆடுகள் உயிரிழந்தன. இந்த ஆடுகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

வலங்கைமான்;

வலங்கைமான் அருகே மேய்ச்சலுக்கு சென்ற 8 ஆடுகள் உயிரிழந்தன. இந்த ஆடுகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

ஆடுகள் சாவு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஊத்துக்காடு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது56). இவருடைய மனைவி சுந்தரி(50). இவர் ஆடுகளை வளர்த்து வந்தார். இந்த ஆடுகளை சுந்தரி தினமும் மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம்.நேற்று முன்தினம் சுந்தரி ஊருக்கு சென்ற நிலையில் அவரது ஆடுகள் அருகே உள்ள ஒரு வாழைத்தோப்பில் மேய்ந்ததாக கூறப்படுகிறது.நேற்று காலை வழக்கம் போல் சுந்தரி வீட்டின் பின்புறம் உள்ள ஆட்டு கொட்டகையில் பார்த்த போது அங்கு ஆறு ஆடுகள் உயிரிழந்து கிடந்தன.2 ஆடுகள் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தன. இது குறித்து சுந்தரி கால்நடை டாக்டருக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் டாக்டர் வருவதற்கு முன்பே 2 ஆடுகளும் உயிரிழந்து விட்டன. ஒரே நேரத்தில் 8 ஆடுகளை பறிகொடுத்த சுந்தரி கதறி அழுதார்.

விஷம் வைத்து கொல்லப்பட்டதா?

இது குறித்து அவர் வலங்கைமான் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதில் அதே கிராம பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது ஆடுகளை விஷம் வைத்து கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும்அவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளாா். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் வளர்த்து வந்த 8 ஆடுகள் ஒரே நேரத்தில் உயிரிழந்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மேலும் செய்திகள்