< Back
மாநில செய்திகள்
8-ந்தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்
அரியலூர்
மாநில செய்திகள்

8-ந்தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

தினத்தந்தி
|
3 Aug 2023 12:39 AM IST

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் அரியலூரில் 8-ந்தேதி நடக்கிறது.

அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 8-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கை மனுக்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் முகம் மட்டும் தெரியும்படியான வண்ண புகைப்படம் ஆகியவற்றை கலெக்டரிடம் நேரிடைய வழங்கி பயனடையலாம், என்று கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்