< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
வீரகனூர் ஆட்டுச்சந்தையில் ரூ.8 கோடிக்கு வர்த்தகம்
|15 Jan 2023 1:00 AM IST
வீரகனூர் ஆட்டுச்சந்தையில் ரூ.8 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.
தலைவாசல்:-
தலைவாசல் அருகே வீரகனூரில் ஆட்டுச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் மற்றும் காளைகள், கறவை மாடுகள் அதிகமாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் நேற்று இரவு வரை தொடர்ந்து விற்பனை நடந்து கொண்டிருந்தது. சேலம், கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்து கால்நடைகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். அதே போல கால்நடைகள் நல்ல விலைக்கு விற்பனையாளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து இரவு பகலாக ஆடுகள், மாடுகள் விற்பனையானதால் ரூ.8 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்று இருக்கலாம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.