< Back
மாநில செய்திகள்
ரூ.8 கோடியில் சாலை பணி
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

ரூ.8 கோடியில் சாலை பணி

தினத்தந்தி
|
29 Sept 2023 12:15 AM IST

திருக்கோவிலூரில் ரூ.8 கோடியில் சாலை பணியை நகரமன்ற தலைவர் முருகன் ஆய்வு செய்தாா்.

திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் நகராட்சியில் கலைஞர் நகர்புர மேம்பாட்டுத் திட்டம் மற்றும் நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் மூலம் ரூ.8 கோடி செலவில் தார் சாலை, சிமெண்டு சாலை மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பல்லவா கார்டன், மகாத்மா காந்தி நகர், மல்லிகை நகர், நகராட்சி தூய்மை பணியாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் புதிய தார்சாலை அமைக்கும் பணி ரூ.1 கோடியே 28 லட்சம் செலவில் நடைபெற்று வருகிறது. இந்த பணியை நகரமன்ற தலைவர் முருகன், நகராட்சி ஆணையாளர் கீதா, துணை தலைவர் உமா மகேஸ்வரி குணா, நகராட்சி பொறியாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது நகரமன்ற தலைவர் முருகன், சாலை பணிகள் தரமாக இருக்கவும், அதேசமயம் விரைவாகவும் செய்து முடிக்க வேண்டும் என்றார். ஆய்வின்போது கவுன்சிலர்கள் ஜல்லி பிரகாஷ், ஜெயந்திமுருகன், வினோத்பாபு, பஷீராஆதம்ஷபி, பிறைமதி ஏழுமலை, ஓவர்சியர் கோபிநாத், தொழில்நுட்ப உதவியாளர்கள் பார்க்கவன், வினோத் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்