< Back
மாநில செய்திகள்
புல்லரம்பாக்கத்தில் ரூ.8 கோடியில் பசுமை பூங்கா - அமைச்சர் காந்தி அடிக்கல் நாட்டினார்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

புல்லரம்பாக்கத்தில் ரூ.8 கோடியில் பசுமை பூங்கா - அமைச்சர் காந்தி அடிக்கல் நாட்டினார்

தினத்தந்தி
|
6 Oct 2023 9:28 AM GMT

புல்லரம்பாக்கத்தில் ரூ.8 கோடியில் அமையவுள்ள பசுமை பூங்கா பணியை அமைச்சர் ஆர்.காந்தி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட புல்லரம்பாக்கம் ஊராட்சியில் சுமார் 29 ஏக்கர் பரப்பளவில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பங்களிப்புடன் ரூ.8 கோடி மதிப்பீட்டில் புதிதாக பசுமை பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதன் கட்டிட பணிக்கு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அடிக்கல் நாட்டினார். மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலை வகித்தார்.

இதையடுத்து அமைச்சர் காந்தி பள்ளிப்பட்டு அடுத்த சானாகுப்பம் கிராமத்திற்கு வந்தார். அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. தற்காலிகமாக அடித்து செல்லப்பட்ட தரைப்பாலத்தின் மீது கற்கள், மண்ணை கொட்டி பாதை அமைத்து அதை பயன்படுத்தி வருகிறோம்.

புதிய தரைப்பாலம் கட்டித்தர அதிகாரிகளிடமும் கோரிக்கை மனு அளித்ததாக கூறினர். இதுகுறித்து அரசு கவனத்திற்கு கொண்டு சென்று தரைப்பாலம் அமைத்து தருவதாக அமைச்சர் காந்தி உறுதி அளித்தார்.

இந்நிகழ்ச்சியில் பூந்தமல்லி எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி, திருத்தணி எம்.எல்.ஏ. சந்திரன், கூடுதல் கலெக்டர் சுகபுத்திரா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், மாவட்ட திட்ட குழு தலைவர் உமா மகேஸ்வரி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்