< Back
மாநில செய்திகள்
நாகர்கோவிலில் 7-வது நாளாக புத்தக திருவிழா கண்காட்சி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

நாகர்கோவிலில் 7-வது நாளாக புத்தக திருவிழா கண்காட்சி

தினத்தந்தி
|
21 April 2023 3:32 AM IST

நாகர்கோவிலில் 7-வது நாளாக புத்தக திருவிழா கண்காட்சி நடந்தது.

நாகர்கோவில்:

குமரி மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பப்பாசி) இணைந்து நடத்தும் மாபெரும் புத்தக திருவிழா கண்காட்சி நாகர்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 7-ம் நாள் நிகழ்ச்சியான நேற்று நடந்த கருத்தரங்கில் மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ஜெரிபா ஜி.இம்மானுவேல் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார். அதைத்தொடர்ந்து பேராசிரியர் ராசாராம் கற்றல் இனிது என்ற தலைப்பிலும், கண்மணி குணசேகரன் நடுக்காட்டு நம்பிக்கைகள் என்ற தலைப்பிலும், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன் நானும் என் படைப்புகளும் என்ற தலைப்பிலும், நாவலாசிரியர் மீரான்மைதீன் பன்முகப் பண்பாட்டு எழுத்து என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்கினார்கள்.

இன்று (வெள்ளிக்கிழமை) வையத்து தலைமை கொள் என்ற தலைப்பில் முனைவர் பர்வீன்சுல்தானா, எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் என்ற தலைப்பில் ஜோமல்லூரி ஆகியோர் பேசுகிறார்கள். நேற்று நடந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்பையா, உணவு பாதுகாப்பு அதிகாரி குமார பாண்டியன், உசூர் மேலாளர்கள் சுப்பிரமணியன், ஜீலியன் ஹீவர், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ், தனி தாசில்தார் கோலப்பன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கணக்கு அதிகாரி ரூஸ்வெல்ட் சேவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்