< Back
மாநில செய்திகள்
கழுத்தில் கயிறு இறுக்கி 7-ம் வகுப்பு மாணவர் சாவு
மாநில செய்திகள்

கழுத்தில் கயிறு இறுக்கி 7-ம் வகுப்பு மாணவர் சாவு

தினத்தந்தி
|
26 Sept 2022 3:14 PM IST

தூக்கில் தொங்குவது எப்படி? என மாணவர் நடித்து காட்டியபோது பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னையை அடுத்த புழல் புத்தகரம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகன் கார்த்திக் (வயது 11). இவர், அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கார்த்திக், தனது தம்பி மற்றும் அண்ணனிடம் தூக்கில் தொங்குவது எப்படி? என நடித்து காட்டியதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக தூக்கு கயிறு கழுத்தை இறுக்கியதில் கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த புழல் போலீசார், தூக்கில் தொங்கிய கார்த்திக் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்