< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
7-ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை
|4 July 2022 10:05 AM IST
திருவள்ளூரில் 7-ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை எண்ணூர் காட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருடைய மகள் சோனிகா (வயது 11) ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இவரை நேற்று முன்தினம் பெற்றோர்கள் கண்டித்து உள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளார்.
மயங்கி விழுந்த அவரை பெற்றோர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.