< Back
மாநில செய்திகள்
மெழுகுவர்த்தி ஏற்றியபோது தீ விபத்து: 7-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு
மாநில செய்திகள்

மெழுகுவர்த்தி ஏற்றியபோது தீ விபத்து: 7-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

தினத்தந்தி
|
16 Dec 2023 2:37 PM IST

சென்னையில் மெழுகுவர்த்தி ஏற்றியபோது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 7-ம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை,

சென்னை ராமாபுரம் காந்தி நகர் 2-வது தெருவைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரின் மகள் விஜயலட்சுமி. இவர் தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த 6-ம் தேதியன்று இவரது வீட்டில் மின்சாரம் இல்லாத நிலையில், மெழுகுவர்த்தி ஏற்றியபோது விஜயலட்சுமியின் துணியில் தீப்பற்றியுள்ளது.

இதில் பலத்த காயமடைந்த அவர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்