< Back
மாநில செய்திகள்
78-வது சுதந்திர தின கொண்டாட்டம்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

கோப்புப்படம்

மாநில செய்திகள்

78-வது சுதந்திர தின கொண்டாட்டம்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

தினத்தந்தி
|
15 Aug 2024 11:30 AM IST

அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்ற வல்லரசாக நம் நாட்டை கட்டமைக்கவும் உறுதியேற்போம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பல்வேறு கட்சித் தலைவர்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில், ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்து களம் கண்டு தியாகத்தின் விளைவாக நம் நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்த விடுதலை வேள்விக்கொண்ட தீரர்களை நினைவுகூர்வதுடன்,

நம் நாட்டின் அடிப்படை விழுமியங்களான ஜனநாயகம், கூட்டாட்சி, சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கவும், அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்ற வல்லரசாக நம் நாட்டை கட்டமைக்கவும் உறுதியேற்போம். இந்தியத் திருநாடு வாழியவே..! தமிழ்நாடு வாழியவே..! அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்