< Back
தமிழக செய்திகள்
அண்ணா பல்கலைக்கழகத்தில் 775 பேராசிரியர்கள் நியமனம்

கோப்புப்படம்

தமிழக செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகத்தில் 775 பேராசிரியர்கள் நியமனம்

தினத்தந்தி
|
28 Oct 2022 12:23 AM IST

அண்ணா பல்கலைக்கழகத்தில் 775 பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் வரும் உறுப்பு கல்லூரிகளில் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் வளாக கல்லூரிகளில் உள்ள 375 பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பும் பணி ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் 16 உறுப்பு கல்லூரிகளில் விரைவில் 400 பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட இருக்கின்றனர். இதன்படி மொத்தம் 775 பேராசிரியர் பணியிடங்கள் வெளிப்படைத்தன்மையுடன் நிரப்பப்பட இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்