< Back
மாநில செய்திகள்
76வது சுதந்திர தின விழா...2023 மாணவர்கள்,ஆசிரியர்கள் செய்யப்போகும் உலக சாதனை
மாநில செய்திகள்

76வது சுதந்திர தின விழா...2023 மாணவர்கள்,ஆசிரியர்கள் செய்யப்போகும் உலக சாதனை

தினத்தந்தி
|
13 Aug 2023 10:35 PM IST

மதுரையில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் தனியார் அமைப்பின் சார்பில் உலக சாதனை முயற்சியாக ஒயிலாட்டம் நடைபெற்றது.

மதுரை,

நாட்டின் 76ஆவது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் தனியார் அமைப்பின் சார்பில் உலக சாதனை முயற்சியாக ஒயிலாட்டம் நடைபெற்றது.

76 வது சுதந்திர தினத்தை எடுத்துரைக்கும் வகையில் இந்திய வரைபடம் நடுவே 76 என்ற எண் வடிவில் 2023 மாணவர்கள், ஆசிரியர்கள் ஒன்றிணைந்து ஒயிலாட்டம் ஆடினர்.

இதனிடையே கோவை அரசுப்பள்ளி மாணவி 10 வயது ராஷினி, கால்களில் ஆணிகளால் ஆன காலணி அணிந்தபடி கரகம் ஆடி உலக சாதனை படைத்தார். அதேபோல், காளம்பாளையத்தை சேர்ந்த ஆகாஷ் என்ற 8 வயது மாணவர் இடுப்பில் ஒரு நிமிடத்தில் 220 முறை வளையத்தை சுற்றி சாதனை நிகழ்த்தினார்

மேலும் செய்திகள்