< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
75-வது சுதந்திர தினவிழா: எழும்பூர் ரெயில் நிலையத்தில் நீராவி ரெயில் என்ஜின் இயக்கம்...!
|15 Aug 2022 4:12 PM IST
75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பழமையான நீராவி ரெயில் என்ஜின் இயக்கப்பட்டது.
சென்னை,
இந்தியா சுதந்திரம் பெற்றும் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நாட்டின் 76-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக இன்று உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சென்னை எழும்பூர்-கோடம்பாக்கம் ரெயில் நிலையம் இடையே பழமையான நீராவி ரெயில் என்ஜின் இயக்கப்பட்டது.
இந்த நீராவி ரெயில் என்ஜினை தெற்கு ரெயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்யா கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும், எழும்பூர்-கோடம்பாக்கம் ரெயில் நிலையம் இடையே இயக்கப்பட்ட நீராவி ரெயில் என்ஜினை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.