< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
75-வது சுதந்திர தின விழா - விடுமுறை நாட்களிலும் தபால் அலுவலகங்களில் தேசிய கொடி விற்பனை
|6 Aug 2022 10:17 PM IST
75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு விடுமுறை நாட்களிலும் தபால் அலுவலகங்களில் தேசிய கொடி விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
'இல்லந்தோறும் மூவர்ண கொடி' ஏற்றும் பிரசாரத்தின் கீழ் தேசியக் கொடிகளின் விற்பனை மற்றும் வினியோகத்தை எளிதாக்கும் வகையில், அந்த பணி தபால் அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் அதனை வாங்குவதற்கு ஏதுவாக, அனைத்து தபால் நிலையங்களும் சுதந்திர தினத்துக்கு முன் வரும் அனைத்து விடுமுறை நாட்களிலும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விடுமுறை நாட்களாக வரும் 7-(ஞாயிற்றுக்கிழமை), 9-(மொகரம் பண்டிகை), 14-(ஞாயிற்றுக்கிழமை)-ந் தேதிகளில் தபால் நிலையங்களில் குறைந்தபட்சம் ஒரு கவுண்ட்டர் மூலம், தேசியக் கொடிகளை வினியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.
மேற்கண்ட தகவல் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.