< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
மாவட்டம் முழுவதும் 734 சிறப்பு முகாம்கள்
|25 July 2023 12:52 AM IST
மாவட்டம் முழுவதும் 734 சிறப்பு முகாம்கள் நடக்கிறது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கான முகாமினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இதையடுத்து விருதுநகர் மாவட்டத்திலும் நேற்று கிராம பகுதிகளில் 734 முகாம்கள் நடத்தப்பட்டன. மொத்தம் 961 ரேஷன் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 4 லட்சத்து 15 ஆயிரத்து 958 ரேஷன் கார்டுதாரரிடம் விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கு முகாம்கள் நேற்று தொடங்கின.
இந்த முகாம் வருகிற 4-ந் தேதி வரை நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் மொத்தம் 6 லட்சத்து 13 ஆயிரத்து 283 ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில் நகர்புற சிறப்பு முகாம்கள் வருகிற 4-ந் தேதி தொடங்கப்படுகிறது. கூரைக்குண்டு ஊராட்சி அலுவலகத்தில் மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்களை பதிவு செய்ய சிறப்பு முகாம் நடைபெற்றது