< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சியில் 73 காவலர்கள் கூண்டோடு பணியிட மாற்றம்
|9 July 2024 8:15 PM IST
கள்ளக்குறிச்சியில் 73 காவலர்கள் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 உதவி ஆய்வாளர்கள் உள்பட 73 காவலர்களை கூண்டோடு பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றி வந்த 39 காவலர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 34 காவலர்கள் அமலாக்கப் பிரிவில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.