< Back
மாநில செய்திகள்
வேலூர்
மாநில செய்திகள்
728 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை
|2 Oct 2023 12:01 AM IST
வேலூர் மாநகராட்சி பகுதியில் 728 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 1,000 சிறப்பு மருத்துவ முகாம் நடத்தும்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி வேலூர் மாநகராட்சி பகுதியில் 10 இடங்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 37 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. இதில் அரசு டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டு முகாமில் பங்கேற்றவர்களுக்கு ரத்த அழுத்தம், இதயதுடிப்பு உள்ளிட்டவற்றை பரிசோதனை செய்து காய்ச்சல் அறிகுறி காணப்பட்டவர்களுக்கு மாத்திரை வழங்கி ஆலோசனைகள் கூறினர்.
வேலூர் மாநகராட்சி பகுதியில் 10 இடங்களில் நடந்த மருத்துவ முகாமில் கலந்துகொண்ட 728 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.