< Back
மாநில செய்திகள்
பயணிகள் வசதிக்காக கூடுதலாக 720 பஸ்கள் இயக்கம்
சேலம்
மாநில செய்திகள்

பயணிகள் வசதிக்காக கூடுதலாக 720 பஸ்கள் இயக்கம்

தினத்தந்தி
|
16 Aug 2022 12:57 AM IST

தொடர் விடுமுறை முடிந்து வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக கூடுதலாக 720 பஸ்கள் இயக்கப்பட்டன என்று சேலம் கோட்ட மேலாண்மை இயக்குனர் பொன்முடி கூறினார்.

தொடர் விடுமுறை முடிந்து வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக கூடுதலாக 720 பஸ்கள் இயக்கப்பட்டன என்று சேலம் கோட்ட மேலாண்மை இயக்குனர் பொன்முடி கூறினார்.

தொடர் விடுமுறை

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் மிக சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு விழாவையொட்டி கடந்த 10-ந்தேதி மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் அரசு விடுமுறை விடப்பட்டது. அதன்பிறகு 11, 12-ந்தேதி ஆகிய 2 நாட்கள் சொந்த விடுமுறை எடுத்தால் 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை அரசு விடுமுறை.

இதனால் வெளியூரில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள், கல்வி பயில்பவர்கள் என ஏராளமானவர்கள் சேலத்திற்கு கடந்த வாரமே விடுமுறை எடுத்துக்கொண்டு வந்தனர். இந்த நிலையில் தொடர் விடுமுறை முடிந்து அவரவர் வேலை பார்க்கும் இடங்களுக்கு செல்ல வசதியாக நேற்று புதிய பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள இயக்கப்பட்டன.

சிறப்பு பஸ்கள்

இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்ட மேலாண்மை இயக்குனர் பொன்முடி கூறும் போது, தொடர் விடுமுறை முடிந்து பயணிகள் வெளியூர் செல்ல வசதியாக காலை முதல் நள்ளிரவு வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நள்ளிரவுக்கு பிறகும் பயணிகள் வருகைக்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்பட்டன.

அதன்படி வழக்கமாக சேலத்தில் இருந்து கோவைக்கு 60 பஸ்கள் இயக்கப்படும். நேற்று கூடுதலாக 94 பஸ்கள் என மொத்தம் 154 பஸ்களும், திருப்பூருக்கு வழக்கத்தை விட 30 பஸ்கள் கூடுதலாக 72 பஸ்களும் இயக்கப்பட்டன. அதே போன்று மதுரை-15, திருச்சி-35, பெங்களூரு-127, சென்னை-50, திருவண்ணாமலை-10, விழுப்புரம்-10, திண்டுக்கல்-10 என கூடுதலாக 381 சிறப்பு பஸ்கள் உள்பட மொத்தம் 720 பஸ்கள் இயக்கப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

வெளியூர் செல்ல பயணிகள் கூடியதால் சேலம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று மாலையில் இருந்து இரவு வரை பயணிகள் கூட்டம் அலைமோதியது.

மேலும் செய்திகள்