< Back
மாநில செய்திகள்
134 பணியிடங்களுக்கான நேர்காணலில் 7,185 பேர் பங்கேற்பு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

134 பணியிடங்களுக்கான நேர்காணலில் 7,185 பேர் பங்கேற்பு

தினத்தந்தி
|
30 Dec 2022 12:41 AM IST

ரேஷன் கடைகளில் 134 பணியிடங்களுக்கான நேர்காணலில் 7,185 பேர் பங்கேற்பு

நாகர்கோவில்,

தமிழகம் முழுவதும் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தில் 117 விற்பனையாளர்கள், 17 கட்டுனர்கள் (பேக்கர்ஸ்) என 134 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களில் விற்பனையாளர்கள் பணியிடங்களுக்கு 9,941 பேரும், கட்டுனர் வேலைக்கு 1,463 பேரும் என மொத்தம் 11,404 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகத் தேர்வு கடந்த 15-ந் தேதி முதல் நாகர்கோவில் டதி பள்ளியில் நடந்து வந்தது. தினம் காலையில் 500 பேரும், மாலையில் 500 பேரும் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. இந்த நேர்காணல் பணி நேற்றுடன் முடிவடைந்தது. நேற்று கட்டுனர் பணியிடங்களுக்கான நேர்காணல் நடந்தது. நேற்றுடன் விற்பனையாளர் பணியிடங்களுக்கு நடந்த நேர்காணலில் 6,480 பேரும், கட்டுனர்கள் பணியிடங்களுக்கு நடந்த நேர்காணலில் 705 பேரும் என மொத்தம் 7,185 பேர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்