மயிலாடுதுறை
2 நாட்களில் குட்கா விற்பனையில் ஈடுபட்ட 71 பேர் கைது
|மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 நாட்களில் குட்கா விற்பனையில் ஈடுபட்ட 71 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
71 பேர் கைது
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 7-ந்தேதி மற்றும் 8-ந் தேதி ஆகிய இருதினங்களில் மாவட்டம் முழுவதும் போலீசாரால் குட்கா வேட்டை நடத்தப்பட்டது. 7-ந்தேதி நடத்தப்பட்ட கூட்டு குட்கா வேட்டையில் 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 40 பேர் கைது செய்யப்பட்ட்டனர். அவர்களிடமிருந்து 4 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
மேலும் 8-ந் தேதி நடத்தப்பட்ட கூட்டு குட்கா வேட்டையில் 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 31 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 3 கிலோ100 கிராம் குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இரு தினங்களிளும் மொத்தம் 71 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 71 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 7கிலோ100 கிராம் குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
'சீல்'
மேலும் மயிலாடுதுறை போலீஸ் நிலைய சரகத்தில் சட்ட விரோதமாக குட்கா போதை பொருட்கள் விற்பனை செய்த இரண்டு கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து சட்ட விரோதமாக போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், சட்ட விரோதமாக மது விற்பனை செய்பவர்கள் பற்றி புகார் அளிக்க 96261-69492 எண்ணில் தொலைபேசி மூலமாகவும், வாட்ஸ்அப் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது