< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
மெரினாவில் கடந்த 4 நாட்களில் 71 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பு
|9 Aug 2022 3:43 PM IST
மெரினாவில் கடந்த 4 நாட்களில் 71 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டது.
சென்னையில் மெரினா, பெசன்ட்நகர், திருவான்மியூர் கடற்கரை பகுதிகளை பிளாஸ்டிக் இல்லா கடற்கரை பகுதிகளாக மாற்றிட ஆகஸ்டு 5-ந்தேதி முதல் தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் என மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி மெரினா கடற்கரையில் கடந்த 5-ந்தேதி முதல் 4 நாட்களில் 1,391 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 61 கடை உரிமையாளர்களிடம் இருந்து 71 கிலோ அளவில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்காக கடை உரிமையாளர்களுக்கு ரூ.15,700 அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி நேற்று பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் நடந்து வரும் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.